மதுரை வைகையாற்றில் அணுகுண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்து இன்ஸ்டகிராமில் இளைஞர்கள் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கடந்த 20ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் இளைஞர்கள் சிலர் வைகையாற்றில் அணுகுண்டு ரக பட்டாசுகளை ஒன்றாக வைத்து அதன் மீது பெட்ரோல் ஊற்றி வெடித்து, இன்ஸ்டகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளனர்.
அதேபோல், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பட்டாசை தூக்கி எறிந்தும், இருசக்கர வாகன ரேஸில் ஈடுபட்டும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள்மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.