கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் -4 தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், உள்ளிட்ட 4 ஆயிரத்து 662 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் எழுதினர். இந்தநிலையில் இதற்கான முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.