ஜம்மு காஷ்மீரில் படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கி மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் ஊக்குவித்துள்ளார்.
உத்தம்பூர் தொகுதியின் எம்பியான பாஜகவை சேர்ந்த ஜிதேந்திரா சிங், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான இணை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
இவர், தனது தொகுதியில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நன்றாகப் படிப்பதற்கு வசதியாக இலவச லேப்டாப்புகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், நன்றாகப் படிக்கும் மாணவிகள் தங்கள் இலக்குகளை அடைய எங்களால் முடிந்த சிறிய உதவியைச் செய்திருக்கிறோம் எனக் கூறினார்.