உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஜெகந்நாதர் ரத யாத்திரையை நடத்துவது சாத்தியமில்லை என ISKCON தெரிவித்துள்ளது.
புனித நூல்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டுமே ஜெகந்நாதரின் ஸ்நான மற்றும் ரத யாத்திரையை உலகம் முழுவதும் கொண்டாடுமாறு, ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் நிர்வாகக் குழு இஸ்கானுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதற்குப் பதிலளித்துள்ள இஸ்கான், வெளிநாடுகளில் வேதங்கள் மற்றும் பாரம்பரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட திதியில் ரத யாத்திரையை கொண்டாடும் முடிவை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளது.