மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் சத்ய நாதெல்லா பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடப்பு நிதியாண்டில் இந்திய மதிப்பில் 846 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இது கடந்த ஆண்டு அவர் ஈட்டிய வருமானத்தைவிட 22% அதிகமாகும்.
சத்யா நாதெல்லாவின் வருமானத்தில் 90 சதவீதம் பங்குகளில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் 23% உயர்ந்துள்ளதே சத்ய நாதெல்லாவின் சொத்து மதிப்பு உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது.