குளிர்காலம் தொடங்கியதை அடுத்து கேதார்நாத் கோயில் நடை இன்று முதல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்துக்களின் 4 புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வரும் நிலையில், கடந்த மே 2ஆம் தேதி கேதர்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது.
நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்து சென்ற நிலையில், மேகவெடிப்பு மற்றும் அதீத கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு சார்தாம் யாத்திரை மெல்ல வேகமெடுத்த நிலையில், குளிர்காலம் தொடங்கியதை அடுத்து கேதார்நாத் கோயில் நடை இன்று முதல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் நடை மூடப்படுவதையொட்டி, கேதார்நாத் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.