பாளையங்கோட்டையில் சமையல்காரருக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்காமல் திமுக நிர்வாகி ஏமாற்றியதாகக் காவல் ஆணையாளரிடம் புகார்மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட பாளையங்கோட்டை வடக்கு பகுதி திமுக செயலாளராக உள்ளவர் அன்டன் செல்லத்துரை.
இவர் தனது மகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தியுள்ளார். அதற்குப் பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரைச் சார்ந்த அந்தோணி ராஜ் என்பவருக்குச் சமையல் காண்ட்ராக்ட் வழங்கியுள்ளார்.
மொத்தமாக 13 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவான நிலையில், 3 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே திமுக பிரமுகர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மீதி பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தோணிராஜூ மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்