மங்கோலியாவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,500ஐ கடந்துள்ளது.
மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாகத் தட்டம்மை நோயானது வேகமாகப் பரவி வருகின்றது.
தொடர்ந்து தட்டம்மை பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,532 ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமார் 13,514 பேர் குணமாகியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.