சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணமங்கலத்தை சேர்ந்த சங்கர் என்பவர், காரில் சென்றபோது, தாயமங்கலம் பகுதியை சேர்ந்த சிலருக்கும், சங்கருக்கும் இடையே வாகனம் நிறுத்தியது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சங்கரை அவர்கள் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல், செல்வக்குமார், பிரேம்குமார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.