கருங்கடலில் எந்தப் பகுதியிலும் தாக்கும் வல்லமை கொண்ட நவீன கடல் டிரோன்களை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாகச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருங்கடலில் ரஷ்ய கப்பல்களைத் தாக்க, உக்ரைன் கடல் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.
Sea Baby என அழைக்கப்படும் இந்த டிரோன்கள், ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
தற்போது 1500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது 2 ஆயிரம் கிலோ எடை வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்த டிரோனை தற்போது வெளி உலகத்திற்கு உக்ரைன் காட்டியுள்ளது.