திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப்பட்டு சரிகை யாககுண்டத்தில் இடப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் காலை யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதல் நாள் பூஜையின்போது, சென்னை ஸ்ரீ முத்தாரம்மன் குரூப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பட்டு சரிகையை வழங்கினார். அந்தச் சரிகை யாகக் குண்டத்தில் இடப்பட்டு பூர்னாகுதி செய்யப்பட்டது.
இதனைதொடா்ந்து யாகச் சாலையில் மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் யாகசாலை பூஜையின்போதும், சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆறு தங்கப்பட்டு சரிகைகளை காணிக்கையாக வழங்கவுள்ளதாகச் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.