அமேசான் வெப் சர்வீசஸ் சர்வர் பாதிப்பால், ஸ்மார்ட் மெத்தை வாடிக்கையாளர்கள் தூங்க முடியாமல் தவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று உலக அளவில் அமேசான் வெப் சர்விசஸ் சர்வர் தொழில்நுட்பம் பாதிப்புக்குள்ளானது. இதனால் AWSஐ சார்ந்து இயங்கும் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்களும் பாதிக்கப்பட்டன.
சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளன. அதிக வெப்பத்தில் தூங்க முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சில பயனாளர்கள் பதிவிட்டனர். இந்தச் சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார்.