இளைஞர் ஒருவர் தீபாவளி பண்டிகை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 20-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், தீப ஒளி ஏற்றியும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடினர்.
இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிலம்பம் கம்பில் பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றினார்.
இதுதொடர்பான வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில் இதே போன்று ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், அந்த இளைஞர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















