சீனாவின் G1 என்றழைக்கப்படும் மனித ரோபோ சண்டையிடும் காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
G1 எனப்படும் மனித வடிவ ரோபோவை சீனா, கடந்த மாதம் சோதனை நடத்தியது. அதன் முடிவுகள், வியக்கதக்கதாக இருந்தன.
பயிற்சியாளர் ஒருவர் ரோபோவை தாக்கிய நிலையில், உடனடியாக எழுந்து நின்று சண்டையிட தயாராக இருப்பது போன்று, அதன் கை, கால்களை அசைவுகள் மூலம் வெளிப்படுத்தின.
அந்தக் காட்சி, உண்மையில் மனிதன் எவ்வாறு சண்டையிடுவோரோ, அது போன்று இருந்தது.ரோபோ மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களையும், அது மிக வேகமாகச் சமாளித்து மீண்டு நிற்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மனிதர்களுக்கே சவாலாக இருக்கும் இந்த ரோபோவின், எதிர்காலத்தில் தொழில்துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் பெரிதாக இருக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.