கோவை தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், உணவு தேடி குப்பேப்பாளையத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானை, மின் கம்பியை சாய்த்துள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்ததில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.