ஒருபுறம் சமைத்துக் கொண்டே, மறுபுறம் லாரியை இயக்கிய இந்திய இளைஞர் ஒருவர், கலிஃபோர்னியாவில் கோர விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஜஷன்பிரீத் சிங் என்ற இளைஞர், கடந்த 2022ல் அமெரிக்க-மெக்சிகோ எல்லையைச் சட்டவிரோதமாகக் கடக்க முயற்சித்து கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமைத்துக் கொண்டே வேகமாக லாரியை இயக்கியதில் முன்னால் சென்ற அனைத்து வாகனங்களையும் கண்மூடித்தனமாக இடித்துத் தள்ளினார்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், ஜஷன்பிரீத் சிங்கை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், லாரியில் ஜஷன்பிரீத் சிங் சமைத்துக் கொண்டே லாரியை இயக்கிய காட்சியும், விபத்தை ஏற்படுத்திய காட்சியும், லாரியில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளன.