வியட்நாமை சேர்ந்த மீனவர் ஒருவர் ஆபத்தான முறையில் மீன்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வியட்நாம்-சீன எல்லைப் பகுதியில் உள்ள ஒரு அருவியில் சுற்றுலா பயணிகள் தங்களை வீடியோ எடுத்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட வீடியோவில், தூரத்தில் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவிக்கு நடுவே சென்று இந்த நபர் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார். இணையத்தில் அவரது அசாத்திய முயற்சிகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.