இந்தியாவின் அழைப்பை ஏற்று, அடுத்தாண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக, கனடா முன்னால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து, கனடாவில் நடந்த G7 உச்சி மாநாட்டின் போதும் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அடுத்தாண்டு டெல்லியில் நடைபெறும் Artificial Intelligence Action Summit மாநாட்டில் பங்கேற்க கனடா நாட்டு பிரதமர் கார்னிக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, அடுத்தாண்டு பிரதமர் மார்க் கார்னி இந்தியா செல்லவிருப்பதாகக் கனடா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.