அசாமில் பலதார திருமணம் மற்றும் லவ் ஜிஹாத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் இதற்கான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக்கூறிய அவர், பலதார திருமணம் மற்றும் கட்டாய மத மாற்றத்தைத் தடுப்பதே இந்தச் சட்டங்களின் முக்கிய நோக்கம் என்றும் விளக்கமளித்தார்.
மேலும் வைஷ்ணவ சத்ராக்கள் எனப்படும் மடங்களின் நிலங்களைப் பாதுகாப்பதற்கும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமைகளை வழங்குவதற்கும் இந்தக் கூட்டத்தொடரில் மசோதாக்களை அறிமுகப்படுத்த அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.