மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தலையணை, மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.
நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது.
காக்காச்சி எஸ்டேட் பகுதியில் காலை 6 சென்டி மீட்டர் மழை பெய்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.
கனமழை காரணமாகக் களக்காடு தலையணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் 10வது நாளாகச் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குப் பக்தர்கள் செல்வதற்கும், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நீடிக்கப்பட்டுள்ளது.