மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மென்பொருள் பொறியாளராக இருந்து டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சராக மாறிய அஹ்மத்தின் இன்ஸ்டா வீடியோ, கோவிட் ஊரடங்கின்போது வரவேற்பை பெற்றது.
பின்னர் அவர் தனது நண்பர்களுடன் இணைந்து Whoopy Digital என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தையும் தொடங்கினார்.
இந்நிலையில், 57 மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்ட இன்ஃப்ளூயன்சர் அசீம் அஹ்மத்தை தொடர்புக்கொண்ட மர்மகும்பல் ஒன்று, Instagram-ல் பதிவிட்டுள்ள பெரும்பாலான பதிவுகள், தங்களுடையது என்றும், காப்புரிமை மீறியுள்ளதால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், மீறினால் தங்களது Instagram பக்கம் நீக்கப்படும் என மிரட்டல் விடுத்து 50 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.
பொறுமை இழந்த இன்ஃப்ளூயன்சர் அசீம் அஹ்மத், ஜபல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
















