சென்னை நந்தனம் அண்ணா சாலையில் சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் பெய்த மழை காரணமாகவும், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகவும் நந்தனம் அண்ணா சாலை பகுதி குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள சாலையும் குண்டும், குழியுமாகக் காணப்படுவதால், நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















