மாங்காடு அருகே வீட்டின் முன்பு காலிமனையில் தேங்கி இருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மாங்காடு சக்தி நகரில் சந்தீப்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது இரண்டரை வயது குழந்தையைக் காணவில்லையெனத் தேடி பார்த்தபோது எதிரே உள்ள காலிமனையில் தேங்கி இருந்த மழைநீரில் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தையின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















