காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் 5 சிப்காட் தொழிற்பூங்காக்கள், 2 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இயங்கி வருகின்றன.
இப்பகுதியில் உள்ள சாலைகள் மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் கனரக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை கருத்தில் கொண்டு விரைந்து இந்தச் சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், தரமான சாலைகளை அமைக்கும் வகையில் ஒப்பந்தம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.