மகளிர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
13வது மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நவி மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா இருவரும் சதமடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.
அப்போது மழை குறுக்கிட்டதால், 44 ஓவர்களில் நியூசிலாந்து அணி 325 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அந்த அணி 271 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனையடுத்து வெற்றிப்பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
















