கோவையில் நடைபெற்ற dude திரைப்படத்தின் வெற்றி விழாவில் மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் dude திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்தப் படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் கீர்த்திஸ்வரன் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.
பின்னர், செல்பி வீடியோ எடுப்பதற்காக மேடையில் ராம்ப் வாக் சென்றனர்.
அப்போது, வீடியோவில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் மீது மாணவர்கள் ஏறியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் தடுப்புகள் சரிந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே விழுந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் மாணவர்களை தூக்கிவிட்டு நெரிசலை சரி செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
















