மலேசியாவின் பாலிக் புலாவ் பகுதியில் உள்ள ஜாலான் துன் சார்டோன் சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாகச் சாலை முழுவதுமாக மூடப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக இந்தச் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலை மேலிருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் எந்தவொரு உயிரிழப்போ அல்லது வாகனங்கள் சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
















