மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு நாள்தோறும் மழை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.
கல்லார் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை உள்ள ரயில் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்ததில் தண்டவாளங்கள் சேதமடைந்தன.
கடந்த 5 நாட்களாக தண்டவாளங்களில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
















