இந்திய விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை விதிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
குறிப்பாக எளிதில் எரியக்கூடிய பொருள்கள் மற்றும் கூர்மையான பொருள்கள் விமானத்தில் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டெல்லியில் இருந்து திமாப்பூர் புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் பயணியொருவரின் பவர் பேங்க் தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து, விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கான புதிய விதிகளை வகுக்கச் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவு எடுத்துள்ளது.
குறிப்பாக இந்திய விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லக் கடுமையான கட்டுப்பாடு அல்லது முற்றிலும் தடை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
















