நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளியில் பாம்பு கடித்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனவன்குடியிருப்பைச் சேர்ந்த தருண் என்ற சிறுவன், அதே பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் பள்ளியில் இடைவேளையின்போது கழிவறைக்கு சென்ற தருண், அவ்வழியாகச் சென்ற பாம்பைத் தெரியாமல் மிதித்துள்ளார்.
இதனையடுத்து தருணை பாம்பு தீண்டிய நிலையில், அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விக்கிரமசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவர் தருண் மேல்சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
















