டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், AIIMS மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 295ஆக பதிவாகியுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, இது மோசம் என்ற பிரிவில் உள்ளது. 201 முதல் 300 வரையிலான AQI மதிப்பானது காற்றின் தரம் மோசம் என்ற பிரிவின் கீழ் வருகிறது.
நீண்ட நேரம் இந்தக் காற்றை சுவாசிப்பது பெரும்பாலான மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனந்த் விஹார், அக்ஷர்தாம் கோவில் போன்ற சில பகுதிகளில் AQI மதிப்பு 403-ஐ தாண்டிக் கடுமையான பிரிவில் உள்ளது.
நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க காற்றின் தர மேலாண்மைக் குழுமம், கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்சன் பிளானை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
















