பத்மாவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பழுதுபார்க்கும் பணியின்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரென ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஓடும் ரயிலில், டியூப் லைட்டில் ஏற்பட்ட கோளாறுகளைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். மின் ஒயரை பணியாளர் ஒருவர் கையில் வைத்திருந்தபோது, திடீரென ரயிலுக்குள் தீப்பொறி பறந்தது.
இது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் ரயிலில் தீப்பிடித்திருந்தால், முழுப் பெட்டி அல்லது ரயிலே எரிந்து சாம்பலாகியிருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் ரயிலில் மின்சாதன பழுதுபார்க்கும் பணிகளை செய்யத் தகுதியும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
















