டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்ட ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
தலைநகர் டெல்லியின் சாதிக் நகர் பகுதியில் பயங்கரவாதிகளை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்புப் பிரிவு போலீசார், இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், இருவரும் டெல்லியில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள், தொட விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா மற்றும் ஏசிபி லலித் மோகன் நேகி தலைமையிலான குழுவின் இந்த நடவடிக்கையால் ISIS பயங்கரவாத அமைப்பின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















