திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளையொட்டி சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 22-ம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரளான மக்கள், கோயிலில் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவின் 4-ம் நாளான இன்று, சண்முக விலாஸ் மண்டபத்தில் பல்வேறு பழங்களை கொண்டு கனிப்பந்தல் அமைக்கப்பட்டது. யாகசாலை பூஜைகள் முடிந்தபின் சண்முக விலாஸ் மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதர், கனிகளுக்கு அருள் பாலிப்பார். பின்னர், பக்தர்களுக்கு கனிகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. 4-ம் நாள் விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை மனமுருக வழிபட்டனர்.
















