நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலரை போலீசார் கைது செய்தனர்.
மாஞ்சோலை பீட் வனப் பகுதியில் வன காவலராக பணியாற்றி வருபவர் அய்யா குட்டி. இவர் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மது போதையில் இருந்த அவர், அங்கிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த நிலையில், அய்யா குட்டியை போலீசார் கைது செய்தனர்.
















