ஆப்ரேஷன் நார்கோஸ் என்ற பெயரில் எழும்பூர் ரயில்வே போலீசார் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது எழும்பூர் வந்தடைந்த ஹவுரா – திருச்சி அதிவிரைவு ரயிலிலிருந்து இறங்கிய சந்தேகத்திற்கிடமான பயணியை விசாரித்ததில், அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக ஐந்து கட்டுகளாக அவர் வைத்திருந்த எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதை கடத்தி வந்த பயணியையும் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டிருப்பது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் சாஹு என்பது தெரியவந்துள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட உலர் கஞ்சா சுமார் நான்கு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
















