தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணியிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சென்னை விமான நிலையம் வந்த அதிகாரிகள், மோப்ப நாய் உதவியுடன் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் பையில் இருந்து 20 கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 10 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
















