திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கந்த சஷ்டியை முன்னிட்டு வெலக்கல் நத்தம் முருகன் கோயிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை நடத்தப்பட இருந்தது. அப்போது கோயிலில் வேல் பூஜை நடத்தக் கூடாது என போலீசார் தடுத்ததால், அருகில் உள்ள இடத்தில் நிர்வாகிகள் பூஜை செய்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து போலீசார், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வேல் பூஜை நடத்தக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே போலீசார் கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















