ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகளை கையாடல் செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு முனிசிபல் காலனியில் செயல்படும் கூட்டுறவு நகர வங்கியில் ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்தநிலையில் வங்கியில் தலைமை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
அதில் பொதுமக்கள் அடகு வைத்த 80 சவரன் நகைகள் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கியின் உதவியாளர் ரமேஷ்குமார் மீது உயரதிகாரிகள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள ரமேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
















