தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பதாக கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
















