நெற்பயிர் சேதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக மாநாடு நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுன் சம்பத், கோவில் சொத்து கோவிலுக்கு தான் என்று நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார். கோவில் வருமானத்தை பயன்படுத்தி கோவிலுக்கும் பக்தர்களுக்கும் தேவையான வரும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் மழையினால் டெல்டா பகுதிகளில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அனுதினமும் போட்டோ ஷூட் செய்து வருவதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறி வருவது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
















