சென்னையை அடுத்த போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பல்வேறு பகுதியில் பெய்த மழை காரணமாக ஐயப்பன்தாங்கல் முதல் காட்டுப்பாக்கம் வரையிலாம சாலையில் மழைநீர் தேங்கியது.
இதனால், தண்ணீரில் வாகனகங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பூவிருந்தவல்லி முதல் மவுண்ட் சாலை வரை மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டுமான நிர்வாகம் சாலையை முறையாகப் பராமரிப்பதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















