தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவியில் குளிக்க 10 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. அதன் எதிரொலியாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 16-ம் தேதி முதல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 20-ம் தேதி மீண்டும் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிக் கரைகள் சேதமடைந்தன. இதையடுத்து மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகு மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















