தனியார் பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் கார் ஒன்று விபத்தில் சிக்கவிருந்த டேஷ் கேமரா வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சாலைகளின் தரம் மேம்படுவதைப் போலவே, வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போல விதிகளை மீறுவதாலும், அஜாக்கிரதையாலும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூரு-ஹைதராபாத் நெடுஞ்சாலையில், தனியார் பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் கார் ஒன்று விபத்தில் சிக்கவிருந்தது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் காரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த டேஷ் கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள காரின் உரிமையாளர், பதற்றப்படாததன் காரணமாக நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்ட நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
















