கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் எடப்பாடியை சேர்ந்த மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு கியோகுஷின் சின்னுஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் கோவையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், எடப்பாடி பகுதியை சேர்ந்த மாணவர்கள் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இதற்கிடையே, இளைஞர் ஒருவர் தனது உடல் மேல் வாகனத்தை ஏற்றிச் சாதனை நிகழ்த்தியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
















