கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருளாதார தடையை விதித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தப்படும் விவகாரத்தில் கொலம்பியா மீது டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், கொலம்பியா அதிபர் பெட்ரோ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், மத்திய கரீபியன் கடலில் செல்லும் கப்பல்கள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை விமர்சித்தார்.
இந்நிலையில் உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
மேலும் அவரது மனைவி வெரோனிகா கார்சியா, மகன் நிக்கோலஸ் பெர்னாண்டோ பெட்ரோ பர்கோஸ் மற்றும் கொலம்பிய உள்துறை அமைச்சர் அர்மாண்டோ ஆல்பர்டோ பெனடெட்டி ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், அமெரிக்கர்களுடன் அவர்கள் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
















