பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முன்னாள் CIA அதிகாரி தெரிவித்துள்ளார்.
1999 இல் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், ராணுவ புரட்சி மூலம் அப்போதைய நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து தன்னை ஆட்சியாளராக அறிவித்து கொண்டார்.
பின்னர் 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் அவர் ராணுவ ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் 15 ஆண்டுகள் சிஐஏவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ என்பவர், தான் கடந்த 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பணிபுரிந்த அனுபவங்களை செய்தி நிறுவனத்திடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய கிரியாகோ, பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சுதந்திரமாக கையாள பர்வேஷ் முஷாரப் அனுமதித்தார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கிரியாகோ, அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றது எனவும், உண்மையில் முஷாரப்பை அமெரிக்கா விலைக்கு வாங்கியது எனவும் கூறினார்.
சமீபத்தில் இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கடும் சேதத்தை சந்தித்த பாகிஸ்தான் மீண்டும் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறது.
இதனால் மீண்டும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை அமெரிக்கா கட்டுப்படுத்துமோ எனக் கேள்வி எழுந்துள்ளது.
















