டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் நிறுவனம் விரைவில் புதியது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடத் தயாராகி வருகிறது.
அண்மையில் ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்பட்டது. புதிய 2026 டிவிஎஸ் M1-S ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக 2026 EICMA காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
















