இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வெனிசுலாவில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை நோக்கிய அமைதியான மாற்றத்திற்கு இந்திய மக்களும் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மச்சாடோ, இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறினார். மேலும், மிக விரைவில் சுதந்திர வெனிசுலாவில் பிரதமர் மோடியை வரவேற்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மரியா கொரினா மச்சாடோ குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
















