அவுரங்காபாத் ரயில் நிலையத்தின் பெயர், சத்ரபதி சாம்பாஜிநகர் ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரத்தை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு 2022ம் ஆண்டு சத்ரபதி சாம்பாஜிநகர் எனப் பெயர் மாற்றம் செய்தது.
இருந்தபோதும் அவுரங்காபாத் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் பெயரையும், சத்ரபதி சாம்பாஜிநகர் எனத் தெற்கு ரயில்வே மாற்றியுள்ளது.
















